26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

குடும்பத்தைக் கடத்தி, கொத்தடிமையாக நடத்திய ஜெயசீலன் குற்றம் சாட்டப்பட்டார்

🔥 Views : 3
👁 Reading Now : 45

🔊To listen to this news in Tamil, Please select the text.

ஒரு குடும்பத்தையே கடத்தி அவர்களைக் கொத்தடிமையாக பல ஆண்டுகள் வேலைக்கு அமர்த்திய தோட்டக் கங்காணியான 51 வயது எல். ஜெயசீலன் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
2008லிருந்து 2021ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி வரை எஸ். வீராசாமி(46), அவரது மனைவி ஏ. ராஜேஸ்வரி(39), பிள்ளைகள் சசிகலா(19), அன்பரசி(22), மருமகன் பி. அரிதாசன்(30) ஆகியோரை ஜெம்போல், ரோம்பின் புக்கிட் திங்கி தோட்டத்தில், கடனை அடைப்பதற்காக அவர்களைக் கொத்தடிமை- களாக வேலை செய்ய வைத்ததாக ஜெயசீலன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றத்தை மறுத்து விசாரணை கோரிய அவர், 25,000 ரிங்கிட் வைப்பு நிதியிலும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரிலும் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கின் முதல் வாசிப்பு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles