
🔊To listen to this news in Tamil, Please select the text.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டுமென கோலாலம்பூரில் நடைபெறும் அம்னோ இளைஞர், மகளிர் மாநாட்டில் சில அம்னோ தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
நஜிப்பை விடுதலை செய்ய வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை. எனினும், அவர் தம்மை நிரபராதி என்று நிரூபிக்க போதுமான வாய்ப்பு தரப்பட வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
எஸ்ஆர்சி நிறுவனத்தின் நிதி முறைகேட்டில் நஜிப்பிற்கு உயர்நீதிமன்றம் 12 ஆண்டு சிறைத் தண்டனையும் 21 கோடி ரிங்கிட் அபராதமும் விதித்தது. அதனை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
தீர்ப்பை எதிர்த்து அவர் தாக்கல் செய்திருக்கும் சீராய்வு மனுவை 19ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றம் விசாரிக்கவிருக்கும் வேளையில், நஜிப் தமது தண்டனையை எதிர்த்து, ஐநா மனித உரிமை மன்றத்திலும் முறையீடு செய்துள்ளார்.


