31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதற்கு
4 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 60

🔊To listen to this news in Tamil, Please select the text.

குடிநுழைவுத் துறை தம்மை 40 நாள்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்த குற்றத்திற்காக 4 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாகத் தர வேண்டுமென்று நைஜீரியரான Simon Adavize Momoh (சைமன் அடவிஸே மோமோ) உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார்.
தம்மிடம் செல்லுபடியாகும் விசா இருந்தபோதும், 2021இல் தாம் மார்ச் 15இல் இருந்து ஏப்ரல் 23ஆம் தேதி வரை சட்டத்திற்கு விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மார்ச் 15ஆம் தேதி மது போதையில் காரோட்டிய குற்றத்திற்காகக் தமக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும் 12,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இதன் பின்னர், கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு 14 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அது 40 நாள்கள் தொடர்ந்ததாகவும் குறிப்பிட்ட அவர், தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணத்தைத் தமக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அதன் பின்னர், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தாம் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles