
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஜொகூரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து ஒன்று செர்டாங் புத்ரா பல்கலைக்கழக டோல் சாவடிக்கருகில் தீப்பிடித்து எரிந்தது.
இச்சம்பவம் காலை 6.19 மணிக்கு நிகழ்ந்ததாகவும் டோல் சாவடியின் ஒரு பகுதி தீயில் கருகியதாகவும் தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
பேருந்து தீயில் முற்றாக அழிந்தாலும் அதில் இருந்த 44 பயணிகளும் ஓட்டுநரும் காயமின்றி தப்பித்தனர். தீயின் காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
