25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

உணவு விலையேற்றத்திற்கு உணவக உரிமையாளர்களைக் குறை கூறலாமா?

🔥 Views : 6
👁 Reading Now : 43

🔊To listen to this news in Tamil, Please select the text.

அதிக விலையில் உணவுப் பொருள்களை விற்கும் உணவகங்களைப் புறக்கணிக்க வேண்டுமென பொருளாதாரத் துறையமைச்சர் Rafizi Ramli (ரபிஸி ரம்லி) கூறியிருப்பதை முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சாடியுள்ளார்.
மூலப் பொருள்களின் விலை குறைந்திருந்தாலும் உணவுப் பொருள்களின் விலையை உணவகங்கள் குறைக்கவில்லை என்று ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியிருந்தார். கொள்ளை லாபம் சம்பாதிக்கவே விருப்பம்போல அவர்கள் விலையை ஏற்றுவதால் பொதுமக்கள் அவற்றை புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்டித்த இஸ்மாயில் சப்ரி, மூலப் பொருள்கள் குறைவான விலையில் கிடைத்தால்தான் உணவக உரிமையாளர்கள் உணவின் விலையைக் குறைக்க முடியும் என்பதால், அதற்கு அரசு தக்க வழியைக் காணாமல் உணவகங்களைப் புறக்கணிப்பதில் எந்தவொரு பயனும் இல்லையென்று குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles