
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் நிலவும் ஆள் பற்றாக்குறையைத் தீர்க்க 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டுவர அரசு அனுமதித்திருப்பது நல்லதே என பலரும் கூறுகின்றனர்.
அது பற்றிக் குறிப்பிட்ட மாநகர் மன்ற முன்னாள் டத்தோ பண்டார் Mahadi Che Ngah (மஹாடி சே ஙகா )பல துறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைத் தீர்க்க அந்நியத் தொழிலாளர்கள் அவசியமே என்றாலும், அவர்கள் வேலை செய்வதை விடுத்து, மெல்ல மெல்ல வர்த்தகத்தில் ஈடுபட்டு உள்நாட்டு வர்த்தகர்களுக்குச் சவால் விடும் அளவிற்கு வளர விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
செலாயாங் மொத்த விலைச் சந்தையிலும் மாநாரில் பல வர்த்தக மையங்களையும் வெளிநாட்டுக் கள்ளக் குடியேறிகள் ஆக்கிரமித்து அட்டகாசம் புரிவது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, வேலைக்கென கொண்டு வரப்படும் அந்நியத் தொழிலாளர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், அவர்களின் சொந்த நாடுகளுக்கே திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமென மஹாடி வலியுறுத்தினார்
