29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பொதுத்தேர்தலின்போது வாக்காளர்கள் ரொக்க பணத்தைக் கோரினர்

🔥 Views : 8
👁 Reading Now : 62

🔊To listen to this news in Tamil, Please select the text.

தேர்தல் பரப்புரைகளின்போது சில வாக்காளர்கள் சொந்தத் தேவைகளுக்கு நன்கொடைகளைக் கேட்டதாகவும் அதன் நோக்கம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அச்சமயத்தில் பணம் கொடுப்பதை குற்றமாகக் கருதக்கூடாது என்று பெரிக்காத்தான் நேசனல் தலைமைச் செயலாளர் Hamzah Zainudin (ஹம்ஸா ஸைனுடின்) தெரிவித்தார்.
பணம் கொடுப்பதன் நோக்கம் நல்லதாக இருக்கும்போது, அதனைக் குற்றமென கூறக்கூடாது என்றும் அவர் குறிபிட்டார்.
15ஆவது பொதுத்தேர்தலின்போது, கோல திரெங்கானு, மாராங், கெமாமான் தொகுதிகளில் பாஸ் கட்சி, வாக்காளர்களின் குடும்பங்களுக்குத் தலா 500, 1,000 ரிங்கிட் வரை தந்திருப்பது சட்ட விரோதம் என்று கூறி, அதனைச் சங்கங்களின் பதிவதிகாரியிடம் திரெங்கானு அம்னோவினர் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles