
🔊To listen to this news in Tamil, Please select the text.
தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதில் நல்ல நோக்கம் இருந்தால் அது குற்றமாகாது என்று பெரிக்காத்தான் கூறியிருப்பதை ஊழலையும் அணுக்கமான- வர்களுக்குச் சலுகை காட்டுவதையும் எதிர்க்கும் சி4 அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது.
அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி புஷ்பா முருகையா கூறும்போது, அம்மாதிரியான கூற்றினை ஏற்க முடியாது என்றும் பரப்புரையின்போது பணம் கொடுப்பது, வாக்கு சேகரிக்க நோக்கம் கொண்டதே என்றும் அது வாக்குக்காகக் கொடுக்கப்படும் லஞ்சம் என்றே கருதப்பட வேண்டுமென தெரிவித்தார்.
அதனை ஒரு வகை தர்மம் என்று ஹாடி அவாங் கூறியிருப்பது சமயத்தை இங்கு வம்புக்கு இழுக்கும் செயலென்றும் புஷ்பா குறிப்பிட்டார்.
