26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

வாக்கு சேகரிக்க கையூட்டு – ஹாடியின் விளக்கம் கண் துடைப்பு

🔥 Views : 7
👁 Reading Now : 44
hadi awang

🔊To listen to this news in Tamil, Please select the text.

வாக்கு சேகரிக்க கையூட்டு கொடுப்பது ஒரு வகை தர்மம் என்று குறிப்பிட்டுள்ள பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ Abdul Hadi Awang (அப்துல் ஹாடி அவாங்)கை அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி கடுமையாகச் சாடியுள்ளார்.
சமய போதகராக இருக்கும் ஹாடி அவாங், பொதுத்தேர்தலில் கோல திரெங்கானு, மாராங், கெமாமான் தொகுகளில் வாக்காளர்களுக்குத் தமது கூட்டணியான பெரிக்காத்தான் எந்தவொரு நன்கொடையையும் வழங்கவில்லை, மாறாக நல்ல உள்ளம் கொண்ட சமூகவாதிகளே பணம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.
அது ஒரு வகை தர்மமே என்றும் வியாக்கியானம் கூறியிருப்பது ஏற்பதற்கில்லை என்று ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டார்.
இம்மாதிரி கூறுவது ஒரு சமய போதகருக்கு அழகல்லவென்றும், பாஸ் கட்சி தனது கொள்கையையும் சமய பார்வையையும் அடிக்கடி மாற்றிக் கொள்வது ஓர் அரசியல் தந்திரமே என்றும் ஸாஹிட் ஹமிடி சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles