
🔊To listen to this news in Tamil, Please select the text.
அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) இணைந்து நடத்திய தித்திக்கும் பொங்கல் திருவிழா துபாய் அல் கிஸ்சாஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லம் பள்ளி மைதானத்தில் டாக்டர். ஷீலா தலைமையில் நடைபெற்றது. பொங்கல் வைத்து, தமிழ்நாடு வாழ்க என்ற முழக்கத்துடன் பெண்கள் முளைப்பாரி கொண்டு வந்து கும்மி அடித்து வழிபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் Dr. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் துபாய் ஈமான் கலாச்சார மையம் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்கள் அரவிந்தன் குழும நிறுவனர் பிரபாகர், சல்வா குரூப்ஸ் நிறுவனர் பகவதி, செய்தியாளர்கள் அஸ்கர், நஜீம் மரிக்கா, கமால் K.V.L, ராஜு, கமால் பாட்சா பாலு, சாகுல் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியினை ஜெகநாதன் மற்றும் அருணா தொகுத்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
