25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தமிழன் உதவும் கரங்கள் அமைப்பின் சமூக சேவை பாராட்டுக்குரியது

🔥 Views : 7
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

இவ்வாண்டிற்கான தைப்பூச தினம் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருப்பதை ஒட்டி, தழிழன் உதவும் கரங்கள் எனும் சமுக அமைப்பினர் பேறு குறைந்தோருக்கு சமூக சேவை செய்து வருவது பத்துமலைத் திருத்தலத்தில் காண முடிவதாக பக்தர் ஒருவர் தமது ஊடகச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தைப்பூசத் தினத்தின்போது, பேறு குறைந்தோர் பத்துமலை ஆலயத்தின் படிகளில் ஏறிச் சென்று முருகனை தரிசிக்க முடியாது என்பதால், இந்த அமைப்பினர் சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் இருக்கும் பேறு குறைந்தோரை, படிகளில் தூக்கிச் சென்று, சாமியைத் தரிசனம் செய்த பின்னர், அவர்களை மீண்டும் தூக்கி வந்து, கீழே விடுவதைக் காண முடிந்ததாக அந்தப் பக்தர் குறிப்பிட்டார்.
மேற்கண்ட அமைப்பினர் இந்தச் சேவையை கடந்த 20 ஆண்டுகளாக எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்துவருவது பெரும் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles