28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்நியக் கைதி மரணம்

🔊To listen to this news in Tamil, Please select the text.

போதைப் பொருள் வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 49 வயது அந்நிய ஆடவர் சுவாசப் பிரச்சினையினால் மரணமடைந்தார்.
ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அவரைப் பதிவு செய்து கொண்டிருக்கும்போது, சுவாசிக்க சிரமப்பட்டதால், மருத்துவனைக்கு அனுப்பி, சிகிச்சை பெறும்போது, மரணமடைந்ததாக போலீஸ் தலைவர் ராவுப் செலாமாட் தெரிவித்தார்.
அவர் அங்குள்ள அடுக்குமாடி வீட்டில் 64.7 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றத்தில், காலை 12.10 மணிக்குக் கைது செய்யப்பட்டு, காலை 2.27 மணியளவில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் இதற்கு முன்னர் அவருக்கு மாரடைப்புப் பிரச்சினை இருந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles