
🔊To listen to this news in Tamil, Please select the text.
வரும் மாநிலத் தேர்தலில் கிளந்தானிலும் திரெங்கானுவிலும் பக்காத்தான் காலூன்ற அம்னோவின் உதவி முக்கியமாகத் தேவையென அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கிழக்குக்கரை மாநிலங்களில் பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கு பலமான ஆதரவு இருப்பதால், அம்னோவின் ஆதரவில் பக்காத்தான் சில தொகுதிகளை வெல்ல முனைய வேண்டும்.
அம்மாநிலங்களில் சமயத்தை முக்கியமாக முன்னிறுத்தி பாஸ் கட்சி மக்களை வசப்படுத்தி பலமாக இருப்பதால், அதனை உடைத்து மடானி கொள்கைகளை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பக்காத்தான் தனது வியூகங்களை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.
