34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

குடிபோதையில் தம்பதியர் விலையுயர்ந்த காரை அடித்து நொறுக்கினர்

🔊To listen to this news in Tamil, Please select the text.

தாமான் லெம்பா ஜெயா மாஜுவில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி, உறவினருக்குச் சொந்தமான மெர்சீடிஸ் பென்ஸ் காரை அடித்து நொறுக்கி, சேதப்படுத்திய தம்பதியரை போலீஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.
அந்த இருவரும் அதே தினத்தில் அங்குள்ள வீடொன்றுக்கு குடிபொதையில் சென்றபோது, வீட்டின் உரிமையாளர் அவர்களை வீட்டிற்கு அனுமதிக்க மறுத்துள்ளார்.   மறு நாள்  கார் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டு, விளக்குகள் உடைக்கப்பட்டு, காரின் மீது கடுமையாகக் கீறப்பட்டிருப்பதைக் கண்டு, போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார். 
புகாரின் பேரில் அவர்கள் 4 நாள்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும்  குற்றப் பின்னணி இருப்பதுவும்  கண்டு பிடிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles