26.4 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

சட்டவிரோத குண்டர் கும்பல் இயக்கத்தில் ஈடுபட்டிருந்த 14 அதிகாரிகள் மீது விசாரணை

🔥 Views : 18
👁 Reading Now : 58

🔊To listen to this news in Tamil, Please select the text.

சட்டவிரோத குண்டர் கும்பல் இயக்கம் ஒன்றில் ஈடுபட்டிருந்த 12 ஊழியர்களும் 2 அதிகாரிகளும் ஓப்ஸ் செலேண்டாங் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டிருப்பதாகப் போலீசார் தெரிவித்தனர்.
அவர்கள் இணைந்துள்ள ‘அயாண்டா ஹரிமாவ் கும்பாங்’ என்ற இயக்கம் பல ஆண்டுகளாக இயங்கி வருவதாகத் தெரிகிறது.
மேற்கண்டோரின் பல வாகனங்கள், கைப்பேசிகள், ஆயுதங்கள், சின்னமிடப்பட்ட சட்டைகள், உறுப்பினர் பாரம், பதிவுப் புத்தகம் போன்றவற்றைப் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்கண்ட கைது நடவடிக்கையானது 1966ஆம் ஆண்டு சங்கங்களின் சட்டம், பிரிவு 43இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles