
🔊To listen to this news in Tamil, Please select the text.
2023ஆம் ஆண்டுக்கான கூடுதல் வரவு செலவுத் திட்டமானது எல்லா சமூகங்களின், அதன் ஒவ்வொரு பிரிவினரின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் வரையப்படுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதில் எந்தப் பிரிவும் விடப்படாது என்று அவர் உறுதி கூறியதோடு, பி40 பிரிவினரோடு எம்40 பிரிவினரின் நலன்களும் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அந்தக் கூடுதல் பட்ஜெட்டானது பிப்ரவரி 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் முந்தைய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களும் அதில் உள்ளடக்கியிருக்கும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.



