
🔊To listen to this news in Tamil, Please select the text.
புரூணை சுல்தான் Sultan Hassanal Bolkiah (ஹசானால் போல்கியா)வுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தனிப்பட்ட நல்லுறவானது இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
புரூணைக்கு இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள அன்வார், புரூணையுடன் MIDA (மைடா) செய்து கொண்ட உடன்படிக்கை கையெழுத்திடும் சடங்கில் கலந்து கொண்டார்.
எண்ணெய், எரிவாயு, டிஜிட்டல் பொருளாதாரம், உற்பத்தித் துறை, விவசாயம், செயற்கை நுண்ணறிவு, சுற்றுலாத் துறை, ஹலால் உணவுத் துறை போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.



