25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலைக்கு பிப் 4-6 வரை 24 மணி நேர ரயில் சேவை

🔥 Views : 8
👁 Reading Now : 30

🔊To listen to this news in Tamil, Please select the text.

தைப்பூசத்தை முன்னிட்டு, KTMB நிறுவனம், பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6-ஆம் தேதி வரை 3 நாள் இரு இரவுகளுக்கு 24 மணி நேரம் இடைவிடாத komuter ரயில் சேவையை வழங்கவிருக்கிறது. வழக்கமான ரயில் போக்குவரத்து சேவை நேரம் முடிந்து கூடுதலாக வழங்கப்படும் இந்த ரயில் சேவை, ஒரு மணி நேர இடைவெளியில் வழங்கப்படுமென, KTMB குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Mohd Rani Hisham Samsudin தெரிவித்தார். இந்த கூடுதல் ரயில் சேவை, பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு மணி 11 தொடங்கி மறுநாள் அதிகாலை மணி 5 வரையிலும் அதற்கடுத்த இரு நாட்களும் தொடரும். Batu Caves நிலையத்திலிருந்து Sungai Gadut நிலையம் வரையிலும், கிள்ளான் துறைமுகத்திலிருந்து Batu Caves நிலையம் வரையிலும் கூடுதலாக 28 ரயில் சேவைகள் ஏற்படுத்தப்படும். இதனிடையே, Tanjung Malim -மிலிருந்து பத்து மலை வழிதடத்திற்கு தைப்பூசத்தை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில் சேவை ஏற்படுத்தப்படாது என Datuk Mohd Rani தெரிவித்தார்.

Related Articles

Latest Articles