
🔊To listen to this news in Tamil, Please select the text.
மலேசியாவில் பல இனங்கள் மற்றும் பல்வேறு சமயங்கள் நிலைத்திருப்பதை உறுதிப்படுத்துவற்கு பள்ளிகளில் இஸ்லாமிய பாடங்கள் மறுஆய்வு செய்யப்படும் என என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்திருக்கிறார். தேசிய பாடத்திட்டத்தில் இஸ்லமிய நாகரீகம் மீதான ஆய்வு நீண்டகாலமாக இருந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். தாங்கள்தான் அதிகாரப்பூர்வமானவர்கள் என கூறிக்கொள்பவர்களின் சித்தாந்தங்களை மாணவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவதை தடுக்க வேண்டியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு உலகளாவிய பண்புகள் மற்றும் மனிதாபிமான கூறுகள் போதிப்பதை உறுதிப்படுத்துவதற்கு தற்போது பள்ளிகளிலும் உயர்க்கல்வி நிலையங்களிலும் கற்றுத்தரப்படும் இஸ்லாமிய சமயக் கல்வி மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



