
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பேச்சு வார்த்தை நடத்தப்படும் என பாஸ் கட்சி உதவித் தலைவர் Ahmad Samsuri Mokhtar(அமாட் சம்சுரி மொக்தார்) தெரிவித்தார். 15ஆவது பொதுத்தேர்தல் நடந்தபோது பாஸ் கட்சியும் பக்காத்தானும் மேற்கண்ட மாநிலங்களுக்குத் தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்படும் என அறிவித்திருந்தன. மாநிலத் தேர்தல்களைத் தனித்தனியாக நடத்தினால், செலவு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் மேற்கண்ட மாநிலங்களில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதே நல்லது என பாஸ் கட்சி கருதுவதாக அமாட் சம்சுரி தெரிவித்தார்.



