
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டில் ஊழலைக் கட்டுப்படுத்த தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளின் செலவினத்தைக் கண்காணிக்க வேண்டுமென துன் மகாதீர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு வேட்பாளர் 2 லட்சம் ரிங்கிட்டை மட்டுமே செலவிட முடியும் என்ற விதிமுறை இருந்தாலும், கட்சி அடிப்படையில் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்- படவில்லை என்று அவர் தெரிவித்தார். கட்சிகள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வேட்பாளர்களை விலைக்கு வாங்கி போட்டியிடும் தொகுதிகளில் அமோக வெற்றியைப் பெறுவதனால், ஊழலை ஒழிக்க வேண்டுமென்று குரல் கொடுக்கும் கட்சிகள் படுதோல்வி அடைய நேரிடுகிறது. 15ஆவது பொதுத்தேர்தலில் இதுவே நடந்துள்ளது என்றும் அதுதான் பச்சை அலையாக வீசியதாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார்.



