25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

போலீஸார் கைப்பேசியைப் பறிப்பதைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

வழக்கின் சந்தேக நபர்களின் கைப்பேசியை போலீஸார் பறிமுதல் செய்வது அதிகாரத் துஷ்பிரயோகம் என்றும் அதனைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டுமென்றும் பெந்தோங் எம்பி Young Syefura Othman (யாங் ஷெய்ஃபுரா ஓஸ்மானின் உதவியாளர் Noor Suhana Ishak (நூர் சுஹானா) வலியுறுத்தியுள்ளார். 15ஆவது பொதுத்தேர்தலை ஒட்டி கடந்தாண்டு அக்டோபர் 16இல் மெகா மூவார் எனும் பரப்புரை பாரிட் ஜாவாவில் நடைபெற்றதாகவும், அதில் கலகம் மூண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதில் கலந்து கொண்ட தம்மை விசாரணைக்கு அழைத்து. கைப்பேசியைப் போலீசார் பறிமுதல் செய்ததாகவும், இது வரை அதனை தம்மிடம் ஒப்படைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில் குற்றவாளியின் எல்லா விவரங்களும் போலீசாரிடம் இருக்கும்போது, கைப்பேசியைப் பறிமுதல் செய்து பலகாலம் போலீசார் வைத்திருக்கத் தகுந்த காரணம் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles