25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

தைப்பூச திருவிழாவில் அன்வார் கலந்துகொள்ளவாரா?

🔥 Views : 6
👁 Reading Now : 49

🔊To listen to this news in Tamil, Please select the text.

பத்துமலை தைப்பூச விழாவில் கலந்துகொள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. தைப்பூச விழா வரும் பிப்ரவரி 5ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பத்துமலையில் இந்த தைப்பூச விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா இன்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்தார். தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ சிவக்குமார் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். அதே வேளையில் இந்த தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழையும் டான்ஸ்ரீ நடராஜா பிரதமரிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தைப்பூச திருவிழாவில் அன்வார் கலந்துகொள்ளவாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles