25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

20 இடங்களில் உள்ள கடப்பிதழ் அலுவலகங்கள் வாரத்தின் 7 நாள்களிலும் இயங்கும்

🔥 Views : 6
👁 Reading Now : 59

🔊To listen to this news in Tamil, Please select the text.

அண்மைய காலமாக கடப்பிதழ் அலுவலகங்களில் கடுமையான கூட்ட நெரிசல் நிலவுதைத் தவிர்க்க 20 இடங்களில் உள்ள அலுவலகங்கள் வாரத்தின் 7 நாள்களிலும் இயங்கும் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்தார். நெருக்கடியான நேரத்தில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இயங்கும் கடப்பிதழ் அலுவகத்திலும் கடப்பிதழ் விநியோகம் செய்ய பணிக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதிகமான விண்ணப்பங்களைப் பெறும் கடப்பிதழ் அலுவலகங்களில் கடப்பிதழ் அச்சு செய்யும் இயந்திரங்கள் கூடுதலாகப் பொருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இணையதளத்தின் வாயிலாக செய்யப்படும் விண்ணப்பங்களில் தேதி, நேரம், வரிசைப்படியான எண்கள் முதலியவை குறிப்பிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles