
🔊To listen to this news in Tamil, Please select the text.
தமது தம்பி Joel Joseph (ஜோயெல் ஜோசப்-27) ஜனவரி 16ஆம் தேதி தூங்கிக் கொண்டிருந்தபோது இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, மரணடைந்த வேளையில், அவன் skull breaker (மண்டையோடு உடைக்கும்) போட்டியில் ஈடுபட்டு மரணமடைந்துள்ளதாகப் பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவரின் சகோதரர் Joshua Joseph (ஜோஸுவா ஜோசப்) தெரிவித்தார். சகோதரரின் இறப்பில் குடும்பத்தினர் கடும் துயரில் இருக்கும்போது, அவரது இறப்பு சம்பந்தமான எதிர்மறையான செய்தி இன்னும் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். தமது தம்பியின் இறப்பிற்கு முன்னர் அவர் நல்ல உடல் நலத்தோடு இருந்ததாக ஜோஸுவா தெரிவித்தார்.skull breaker (ஸ்கல் பிரேக்கர்) எனப்படும் மண்டையோடு உடைக்கும் போட்டி தற்போது இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருவதாகவும் அதில் ஒருவரை நடுவில் இருக்க வைத்து, எம்பிக் குதிக்கச் செய்து, அவரின் கால்களை பின் பக்கத்தில் இருந்து உதைத்துக் கீழே தள்ளும் போட்டியாகும்.



