26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அம்னோவிலிருந்து கைரி,நோ ஓமார் நீக்கம்; ஹிஷாமுடின் , ஷாரில் இடைநீக்கம்

🔥 Views : 8
👁 Reading Now : 27

🔊To listen to this news in Tamil, Please select the text.

நான் அதிகம் நேசித்த, விசுவாசமாக இருந்த கட்சியினால் நீக்கப்பட்டுவிட்டேன். இதனால் மனம் உடைந்து போகவில்லை ; அடிபணிந்தும் போகவில்லை என அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட பின் கைரி ஜமாலுடின் தமது டுவிட்டரில் பதிவிட்டார். 15-வது பொதுத் தேர்தலின்போது கட்சியின் ஒழுங்கை மீறியதால் அம்னோ சட்ட விதிக்கு ஏற்ப கட்சியிலிருந்து கைரி நீக்கப்படுவதாக அம்னோ உச்சமன்றம் நேற்றிரவு முடிவு செய்தது. அம்னோவின் இந்த முடிவால் தாம் ஏமாற்றம் அடையவில்லை என்றும் கைரி தெரிவித்தார். இதனிடையே, நேற்றிரவு கூடிய அம்னோ உச்ச மன்றம், சிலாங்கூர் அம்னோ தொடர்பு குழுவின் முன்னாள் தலைவர் நோ ஒமாரையும் கட்சியிலிருந்து நீக்கியது.
மேலும், Sembrong நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Hishamuddin , கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் Shahril Hamdan ஆகியோரும் அம்னோவிலிருந்து 6 ஆண்டுகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles