26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

கெடா தேர்தல் தொகுதிப் பங்கீட்டில்
அண்ணன்-தம்பி மனப்போக்கு கூடாது

🔥 Views : 6
👁 Reading Now : 63

🔊To listen to this news in Tamil, Please select the text.

விரைவில் நடைபெறவிருக்கும் கெடா மாநிலத் தேர்தலில் பக்காத்தானும் தேசிய முன்னணியும் ஒற்றுமையோடு செயல்பட்டால் பாஸ் கட்சியிடமிருந்து அம்மாநிலத்தைக் கைப்பற்ற முடியும் என அமானாவின் உதவித் தலைவர் Mahfuz Omar (மாஃபுஸ் ஒமார்) தெரிவித்தார்.
அங்கு தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்தை விரைவில் நடைபெறும் என்றும் அதில் விட்டுக் கொடுக்கும் போக்கும், பக்காத்தான்-தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையே கூடுதல் நல்லிணக்கம் இருந்தால், தொகுதிப் பங்கீடு சுமுகமாகவும் ஒரே கட்சி அதிக தொகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாத நிலையும் உருவாகும் என குறிப்பிட்டார்.
பேச்சு வார்த்தையில் அண்ணன் தம்பி போக்கு இருக்கக் கூடாதென்பதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles