
🔊To listen to this news in Tamil, Please select the text.
6 மாநிலங்களுக்கான தேர்தல் இவ்வாண்டு நடைபெற்றாலும் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படாது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ Amirudin Shari (அமிருடின் ஷாரி) தெரிவித்தார்.
நேற்று ஸ்ரீபகாங்கில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ Wan Rosdy Wan Ismail (வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் )உடன் சந்திப்பை நடத்திய அவர், மாநிலத் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தேசிய முன்னணியும் பக்காத்தான் ஹராப்பானும் அங்கு அமோக வெற்றி பெற கூட்டுச் செயலவை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தொகுதிப் பங்கீடுப் பிரச்சினை பின்னர் விவாதிக்கப்பட்டு, தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
