
🔊To listen to this news in Tamil, Please select the text.
கடந்த வாரம் சுவீடன், ஸ்டோக்ஹோமில் அரசியல்வாதி Rasmus Paludan’s (ராஸ்முஸ் பலுடான்) என்பவர் இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ரானை எரித்ததைக் கண்டித்து எதிர்ப்புப் பேரணி ஒன்று தலைநகரில் நடத்தப்பட்டது.
பெர்சத்து, பாஸ், முஸ்லிம் அரசு சாரா இயக்கங்களின் தலைமையில் 1,000 பேர் வரை கலந்து கொண்ட அந்தப் பேரணி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர், கோலாலம்பூர் இரட்டைக் கோபுர As-Syakirin மசூதியில் இருந்து புறப்பட்டு ஜாலான் துன் ரசாக்கில் உள்ள சுவீடன் தூதரகத்திற்குச் சென்று தங்களின் அதிருப்தியைத் தெரிவித்தது.
அதில் கலந்து கொண்டோர் ‘வாழ்க இஸ்லாம், சுவீடனுக்கு எதிர்ப்பு, சுவீடனை ஒழிப்போம்’ என்ற வாசகங்களை முழங்கிச் சென்றனர்.
சுவீடன் அரசியல்வாதியின் செயலை மன்னிக்க முடியாது என்றும் அவருக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமென்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
