26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

என்னை அரசியலில் இருந்து ஒழிக்கவே
ஒருதலைப்பட்சமான, தன்மூப்பான நடவடிக்கை

🔥 Views : 6
👁 Reading Now : 39

🔊To listen to this news in Tamil, Please select the text.

தம்மைக் கட்சியிலிருந்து நீக்கியது முறையற்ற நடவடிக்கை என அம்னோவின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
தமக்குக் காரணம் கோரும் கடிதம் தரப்படவில்லை என்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தம்மை அழைத்து விசாரணை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படாமல் தம்மை ஒருதலைப்பட்சமாக நீக்கியதாக அறிவிக்கப்பட்டது அராஜகம், அநியாயம் என அவர் குற்றம் சாட்டினார்.
அதனால் தாம் சோர்ந்து விடவில்லை. முடக்கவும் முடியாது என்றும், தமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை, தாம் வீறு கொண்டு எழ இது உத்வேகத்தை அளித்திருப்பதாகவும் கைரி தமது இன்ஸ்டாக்ராமில் செய்தி வெளியிட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles