
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ தலைவர்கள் சிலர் கட்சியி- லிருந்து நீக்கப்பட்டதோடு, சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டதில் தமக்கு உடன்பாடு இல்லையென உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
முக்கிய தலைவர்களை நீக்கியது இயற்கை நியதிகளுக்கு முரணானது என்றும் கட்சியின் துணை விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நியாயமாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை செய்து, அதன் பரிந்துரையின் பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
