27.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இந்து ஆலய ஒருங்கிணைப்புப் பிரிவை முடக்க காரணம் என்ன?

🔥 Views : 6
👁 Reading Now : 37

🔊To listen to this news in Tamil, Please select the text.

மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வந்த இந்து ஆலய ஒருங்கிணைப்புக் குழு முடக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய நண்பன் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த காலத்தில் மனிதவள அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ எம். சரவணன் அதனை உருவாக்கி நாட்டில் உள்ள இந்து ஆலயங்களின் தரவுகளைச் சேகரித்து ஆலயத் தலைவர்களுக்கு ஆன்மிக பயிற்சியை நடத்தி வந்துள்ளது.
பல ஆலயங்களுக்கு அந்தக் குழு வருகை தந்து நூற்றுக் கணக்கான ஆலய தரவுகளைச் சேர்திருப்பதோடு கடந்தாண்டு ஜொகூரில் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் 324 ஆலயப் பிரதிநிதிகளும் பேரக்கில் 400 பேரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் எந்தக் காரணமும் கூறாமல் இந்தப் பிரிவை முடக்க இந்திய அமைச்சர் ஒருவர் நடவடிக்கை எடுத்துள்ளது நியாயமில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கான விளக்கத்தை அந்த அமைச்சர் தெரிவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles