27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் பெர்சத்துவில் இணைய அழைப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

அம்னோவில் இருந்து கைரி ஜமாலுடின், நோ ஒமாரும் நீக்கப்பட்டு பல முக்கிய தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட அம்னோ தலைவர்கள் பெர்சத்துவில் இணைந்தால் அதனை தாம் பெருமனதொடு வரவேற்பதாக பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ ஹிஷாமுடின் யாசின் தெரிவித்துள்ளார்.
அம்னோவில் தற்போது ஜனநாயகம் இல்லையென்றும் தன்மூப்பாக பலரைப் பதவி நீக்கம் செய்திருப்பது அநியாயம் என்றும் அது அடிமட்டத் தொண்டர்களின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் என்றும் முஹிடின் குறிப்பிட்டார்.
கைரி ஜமாலுடின் ஒரு சிறந்த தலைவர். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நல்ல முறையில் செயலாற்றக் கூடிய அனுபவமிக்க தலைவர். அவரைப் போன்ற பலரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது சரியான முடிவல்ல என்றும் முஹிடின் குற்றம் சாட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles