
🔊To listen to this news in Tamil, Please select the text.
பதவி வந்த பின்னர் மக்களை உதாசீனப்- படுத்தும் அரசியல்வாதிகளின் நடவடிக்கை நிறுத்தபட வேண்டுமென்றும் பொதுமக்களின் நலனை முன்னிட்டே அரசியல்வாதிகள் உழைக்க வேண்டுமென்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நாட்டில் எல்லா வளமும் இருந்தாலும் வசதி குறைந்தவர்கள் வறியவர்களாகவும் அரசியல்வாதிகள் பெரும் செல்வந்தர்களாகவும் இருப்பது நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் செல்வ வளம் எல்லா இன மக்களுக்கும் சரி சமமாக விநியோகிக்கப்பட வேண்டுமென்றும் வறியோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
செம்மோர், கிளேபாங் தமிழ்ப்பள்ளியில் பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பல வெளிநாடுகள் மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதால் அதன் மூலம் வேலை வாய்ப்பும் பொருளாதாரமும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.
