
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவில் முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை வெறுமனவே பார்த்துக் கொண்டிருப்பது ஒற்றுமை அரசாங்கத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்- கின்றனர்.
அக்கட்சியில் நிலவும் மோதலானது எதிர்வரும் 6 மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்கும் என்றும் அதனால் பக்காத்தான் ஆட்சி ஆட்டம் காண்பதோடு, நிலையற்றத் தன்மையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
கட்சியின் மீதான வெறுப்பின் காரணமாக அம்னோ உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தால், ஒற்றுமை அரசாங்கம் நிலைக்க முடியாது என்றும் அது கவிழும் வாய்ப்பும் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் இதில் தலையிட்டு சமரசம் கண்டால்தான் ஒற்றுமை அரசாங்கம் கவிழாமல் காப்பாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலங்கள் பக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
