34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

நூருல் பொருளாதார, நிதி துறையின் மூத்த ஆலோசகராகும் எல்லாத் தகுதியையும் கொண்டுள்ளார்

🔊To listen to this news in Tamil, Please select the text.

தமது புதல்வி Nurul Izzah Anwar (நூருல் இஸ்ஸாவின் தகுதி, அனுபவ அடிப்படையில் தமது பொருளாதார, நிதித் துறையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார்.
நூருல் பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும், பொது, சமூகக் கொள்கைத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றிருப்பதால் அவரைத் தமது ஆலோசகராக, சம்பளமில்லா பதவியில் அமர்த்தி இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.
தமக்கு நிதித் துறையில் பட்டம் எதுவும் இல்லாதபோதும், 8 ஆண்டுகள் தாம் நாட்டின் நிதியமைச்சராகப் பணியாற்றியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தாம் 3 தவணைகள் எம்பியாகவும், பொது கணக்குக் குழுவில் உறுப்பினராகவும் இருந்ததும், டிவெட் தொழில்நுட்பப் பயிற்சிக்காகப் பாடுபட்ட அனுபவமும் தமக்கு இருப்பதாக நூருல் இஸ்ஸா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles