
🔊To listen to this news in Tamil, Please select the text.
60 ஆண்டு காலம் நாட்டில் கோலோச்சிய அம்னோ தற்போது வலுவிழந்து இருக்கும் நிலையில், தலைமைத்துவத்திற்கு எதிர்வினை- யாற்றும் தலைவர்கள் சிலரை அம்னோ உச்சமன்றம் கட்சியிலிருந்து நீக்கியும் பலரை இடைநீக்கம் செய்திருப்பதும் தேன் கூட்டைக் கலைத்திருக்கும் செயல் என விமர்சிக்கப் பட்டுள்ளது.
கட்சியை வழிநடத்த எல்லாத் தகுதியிருக்கும் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தலைமைக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து, வரும் காலத்தில் நாட்டின் பிரதமராவதே தமது குறிக்கோள் என கூறியதும் கட்சியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
அவரை வளரவிட்டால் தங்களின் பதவிக்கு ஆபத்து என்ற பயத்தில், 3 முறை வெற்றி பெற்ற ரெம்பாவ் தொகுதி மறுக்கப்பட்டு, அலைக்- கழிக்கப்பட்டு, கடைசி நிமிடத்தில் சுங்கை பூலோ தொகுதி வேண்டா வெறுப்பாக ஒதுக்கப்பட்டது.
இப்போது அவர் நீக்கப்பட்டது, வரும் மாநிலத் தேர்தல்களில் நிச்சயமாக எரிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்னோவுக்கு அது சறுக்களை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில், கைரி தமக்குச் சாதகமான கட்சியில் சேரலாம் அல்லது சொந்தக் கட்சி ஒன்றை தோற்றுவிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அவரை நீக்கியதன் மூலம் அம்னோ உறுப்பினர்களின் நம்பிக்கையை இழக்கும் என்றும் அதன் காரணமாக மேலும் நலிவடையும் என்றும் ஆரூடம் கூறப்படுகிறது.
