
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் மொத்த கடன் தொகை ஒரு டிரில்லியன் கோடி ரிங்கிட்டாக (ஒன்றரை லட்சம் கோடி) உயர்ந்திருப்பது பெரும் சுமையாக இருப்பதால் அதனைக் குறைப்பதே தமது தலையாய நோக்கமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிப்ரவரி 24ஆம் தேதி இவ்வாண்டுக்கான திருத்தப்பட்டு, தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் துண்டு விழும் பட்ஜெட்டாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் கடன் தொகை உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 61 விழுக்காடாக இருப்பது நல்லதல்லவென்றும் அதனைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
இந்நிலையில், முந்தைய பக்காத்தான் ஆட்சியில் அகற்றப்பட்ட சிறந்த, வெளிப்படைத் தன்மைமிக்க பொருள் சேவை வரியான ஜி எஸ்டியை தற்போதைக்கு அமல் படுத்துவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வசதி குறைந்த, நடுத்தர மக்களின் சுமையை எப்பாடுபட்டாகிலும் குறைப்பதற்கு வரி விதிப்பை மாற்றயமைப்பதோடு, விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கையும் மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
