
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோவில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டால் ஒழிய தாம் மீண்டும் அதில் சேர விரும்பவில்லை என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
இந்நிலையில், வேறு கட்சிகளில் சேருவதற்கு முன்னர் தமக்கு வரும் அழைப்புகளைத் துல்லியமாக ஆராய்ந்து முடிவெடுக்கும் கட்டாயம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
தமக்கு ஏற்புடைய எல்லாத் தேவைகளையும் உள்ளடக்கிய, மேன்மைமிக்க சிறந்த நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் கட்சியே தமக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் வரும் மாநிலத் தேர்தலில் தாம் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
