
🔊To listen to this news in Tamil, Please select the text.
வறிய குடும்பத்துப் பிள்ளைகள் உயர் கல்விக் கூடங்களில் இலவசமாகக் கல்வி பயில திட்டம் வகுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் Khalid Nordin (காலிட் நோர்டின்) தெரிவித்தார்.
தொழில்நுட்ப, தொழில்துறன் துறைகளில் (டிவெட்) கல்வியும் பயிற்சியும் அளிக்கப்பட்ட அந்தப் பிரிவில் உள்ள மாணவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை நிலை உயர அது வழி காணும் என காலிட் தெரிவித்தார்.
தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்விக் கடனுதவியான பிடிபிடிஎன் நிதியத்தின் கடனைக் குறைக்க, நிதியத்தை தேசிய அறக்கட்டளை நிதியமாக மாற்றும் பரிந்துரையை அமைச்சரவையில் பரிந்துரைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
