25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

மலைச் சரிவுகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தடை

🔥 Views : 7
👁 Reading Now : 32

🔊To listen to this news in Tamil, Please select the text.

மாநில ஊராட்சி மன்றங்கள் தன்னிச்சையாக மலை முகட்டிலும் மலைச்சரிவுகளிலும் நிர்மாணிக்கும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஊராட்சி மன்றங்கள் அனுமதி தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு சுங்கை ஆரா குடியிருப்பாளர்கள் 20 பேர் சன்வே ஹில்ஸ் மேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தின் தடையுத்தரவைக் கோரியதை அடுத்து, அந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி பத்மநாதன் தலைமையிலான அமர்வு, இனி தன்னிச்சையாக வீடைமைப்பை நிர்மாணிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார்.
மலை முகட்டிலும் மலைச் சரிவுகளிலும் கட்டப்படும் சிறப்பு வீடமைப்புத் திட்டங்கள் யாவும் இனி 1976ஆம் ஆண்டு டிசிபிஏ அல்லது தேசிய கட்டமைப்புத் திட்டத்தின் பிரிவு 15(5) விதிமுறையைப் பின்பற்ற வேண்டுமென நீதிபதி நளினி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பானது நாட்டின் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தும் என வழக்கறிஞர் ராஜேஸ் நாகப்பன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles