33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

பேச்சைக் குறைத்து, செயலில் இறங்குங்கள்

🔊To listen to this news in Tamil, Please select the text.

15ஆவது பொதுத்தேர்தல் முடிந்த பின்னர் நாடும் மக்களும் எதிர்நோக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் அதிரடியாகத் தீர்வைக் காண வேண்டுமென முன்னாள் துணைப் பிரதமர் Musa Hitam (மூசா ஹீத்தாம்) அறைகூவல் விடுத்திருந்தார்.
பிரச்சினைகளைத் தீர்க்க குறைந்தது ஈராண்டுகள் ஆகும் என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லியின் கூற்றை ஏற்பதற்கில்லை என்று கூறிய மூசா ஹீத்தாம், அவ்வளவு காலத்திற்கு மக்கள் பொறுமை காக்க மாட்டார்கள் என்றும் நடக்கவிருக்கும் 6 மாநிலத் தேர்தல்களில் பெரிக்காத்தானின் ‘பச்சை அலை’ ஒற்றுமை அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று எச்சரித்தார்.
எனவே, இனியும் தாமதிக்காமல் அமைச்சர்கள் அதிரடியாகக் களத்தில் இறங்கி வாக்குறுதி அளித்த திட்டங்களைச் செயல்படுத்த முனைய வேண்டுமென மூசா ஹீத்தாம் கேட்டுக் கொண்டார்.
அதனை தாம் ஆமோதிப்பதாகவும் ஒற்றுமை அரசின் அமைச்சர்கள் முழு மூச்சாக இறங்கி செயலாற்ற வேண்டுமென மூத்த அரசியல்வாதி Lim Kit Siang (லிம் கிட் சியாங்) கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles