29.7 C
Kuala Lumpur
Monday, July 27, 2026

Vetri

ஊழல் குறியீட்டில் நாட்டிற்குப் பெரும் சரிவு
கடுமையான நடவடிக்கை அவசியம்

🔥 Views : 24
👁 Reading Now : 38

🔊To listen to this news in Tamil, Please select the text.

2022ஆம் ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில் மலேசியா ஒரு புள்ளி குறைந்து 47 புள்ளிகள் பெற்றிருப்பது பெரும் தலைக்குனிவு என்றும் நாட்டில் ஊழல் அதிகரித்து வருவதை இது புலப்படுத்துவதாகவும் டிரான்ஸ்பேரன்ஸி இண்டர்நேஷனல் மலேசியாவின் தலைவர் முகமட் மோகன் அச்சம் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஊக்குவிப்பு நிதியளிப்பை மக்களவையின் அங்கீகாரத்தைப் பெறாமல் நடைமுறைப் படுத்தியது, அரசு சார்பு நிறுவனங்களில் நிதி முறைகேடு, அரசு ஊழியர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவை ஊழலுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
எனவே, 2019ஆம் ஆண்டில் 53ஆக இருந்த குறியீட்டைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழலைக் களையெடுக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து, ஊழல் குறியீட்டை 50க்கும் அதிகமாக உயர்த்த வேண்டுமென முகமட் மோகன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles