
🔊To listen to this news in Tamil, Please select the text.
எனது புதல்வி நூருல் இஸ்ஸா அன்வாரை பொருளாதார ஆலோசகர் பதவியில் நியமனத்தைக் குறை கூறுவோர் அவர்களது காலத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் அரசு பணத்தை வாரி இறைத்துள்ளதால் அவர்கள் தம்மைக் குறைகூறுவதற்குத் தகுதி இல்லாதவர்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களது காலத்தில் அரசுப் பதவிகளை வேண்டப்பட்டவர்களுக்குப் பட்டம், பதவி, சொகுசு வாழ்க்கை, எல்லாவித அரசு சலுகைகளையும் வழங்கி முறைகேட்டை நடத்தி இருந்தவர்கள் எனது புதல்வி நூருல் இஸ்ஸாவுக்கு சம்பளமில்லா பதவியை வழங்கிய தம்மை நிந்திப்பது நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.



