23.6 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் யாருக்கு?

🔥 Views : 16
👁 Reading Now : 26

🔊To listen to this news in Tamil, Please select the text.

15ஆவது பொதுத்தேர்தலில் இந்தியர்கள் 80 விழுக்காட்டினரின் ஆதரவு கிடைத்த காரணத்தினால் பக்காத்தான் வெற்றி பெற்று ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்கக் காரணமாக அமைந்துள்ளது.
ஆனால், இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் புஸ்வானமாக ஆகியுள்ளதால் இந்திய சமூகம் பக்காத்தான் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், அமைச்சரவையில் போதுமான இடம் அளிக்கப்படாமை, தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் சீக்கியருக்கு இடம் அளித்திருப்பது, அரசு நியமனங்களில் அமைச்சர் சிவகுமாரின் நடவடிக்கை, எஸ்பிஎம் தேர்வு பயிற்சிக் கருத்தரங்கில் இந்திய, சீன மாணவர்களைப் புறந்தள்ளியது போன்ற விஷயங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்துள்ளது.
இந்நிலையில், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் இந்தியர்களின் வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்குச் செல்லாமல் தடுக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடியாக நடவடிக்கையை எடுத்து இந்தியர்களின் வாக்குகளைப் பக்காத்தானுக்கு ஆதரவாகத் திருப்பிவிடும் நடவடிக்கையை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles