28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இடைநீக்கத்திற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை

🔊To listen to this news in Tamil, Please select the text.

தம்மைக் கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தைத் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் தற்காப்பு அமைச்சர் Hishammuddin Hussein (ஹிஷாமுடின் ஹுசேய்ன்) தெரிவித்தார்.
நேற்று கிடைக்கப்பெற்ற இடைநீக்கத்திற்- கான கடிதத்தில் கட்சியின் துணை விதி 20.9ஐ மீறி நடந்து கொண்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஹிஷாமுடின் ஹுசேய்ன், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் Shahril Hamdan, (ஷாஹ்ரில் ஹம்டான்), ஜெம்போல் எம்பி Salim Sharif (சலிம் ஷாரிஃப்), தெப்ராவ் தொகுதித் தலைவர் Maulizan Bujang (மவுலிஸான் பூஜாங்) ஆகியோர் 6 ஆண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, பெர்சத்துவின் முஹிடின் யாசின் பிரதமராவதற்கு 10 எம்பிக்களின் சத்தியப் பிரமாணத்தைச் சேகரிக்க ஹிஷாமுடின் செயல்பட்டதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkasi (புவாட் ஸர்க்காசி) குற்றம் சாட்டியிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles