34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அம்னோ உதவித் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி

🔊To listen to this news in Tamil, Please select the text.

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் அம்னோ உதவித் தலைவர் பதவிக்குக் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் கைரி ஜமாலுடின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஹிஷாமுடின் ஹுசேய்ன் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து இந்நிலை உருவாகியுள்ளது.
கட்சித் தேர்தலில் Ismail Sabri (இஸ்மாயில் சப்ரி), Khalid Nordin (காலிட் நோர்டின்), Mahdzir Khalid (மாட்ஸிர் காலிட்) ஆகியோர் களமிறங்கத் தயாராக உள்ளனர்.
அவர்களோடு கட்சிச் செயலாளர் Zambri Kadir (ஸம்ரி காதிர்), முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் Ashraf Wajdi Dusuki (அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி), சட்டத்துறை அமைச்சர் Azalina Osman (அஸாலினா ஓஸ்மான்), shamsul Anwar (சம்சுல் அனுவார்), Johari Abdul Ghani (ஜொஹாரி அப்துல் கனி), Azni Mohd (அஸ்னி முகமட்) ஆகியோர் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடும் என தெரிகிறது.
தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles