
🔊To listen to this news in Tamil, Please select the text.
அமைச்சர்களுக்கான ஆலோசகர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புடைமையும் இல்லையென்பதால் அப்பதவிக்கான விதிமுறையை வகுக்க வேண்டுமென சுவாராமின் முன்னாள் ஆலோசகர் Kua Kia Soong (குவா கியா சூங்) வலியுறுத்தியுள்ளார்.
பக்காத்தான் ஆட்சி காலத்தில் Tian Chua (தியான் சுவா) பொதுப்பணித் துறையின் ஆலோசகராகவும் Daim Zainudin (டாய்ம் ஸைனுடின்) பெருமக்கள் ஆலோசனை மன்றத்தின் தலைவராகவும் முஹிடின் காலத்தில் பெர்சத்துவின் Ahmad Faizal Azumu (அமாட் ஃபைஸால் அஸுமு) சிறப்பு ஆலோசகராகவும், இஸ்மாயில் சப்ரியின் காலத்தில் Jamil Khir Baharom (ஜாமில் கிர் பஹாரோம்) சமய விவகார ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்நிலையில், அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸ்ஸா அன்வார் அண்மையில் பொருளாதார, நிதித் துறையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது.
எனவே, ஆலோசகர் பதவிக்குத் தெளிவான நெறிமுறையும் வழிமுறையும் வரையப்படுவது மிகவும் அவசியம் என குவா கியா சூன் அறிவுறுத்தியுள்ளார்.
