27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

அந்நியர்களை வேலையில் சேர்க்கும் நிபந்தனைகளில் தளர்வு வேண்டும்

🔥 Views : 6
👁 Reading Now : 29

🔊To listen to this news in Tamil, Please select the text.

குறிப்பிட்ட துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை அமர்த்தும் நிபந்தனைகளில் தளர்வு வேண்டுமென தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உற்பத்தி, கட்டுமானம், தோட்டத் துறை, விவசாயம் மற்றும் உணவகத் துறைகளுக்கு மட்டுமே அந்நியர்களை அனுமதிக்கும்போது, மற்ற சேவைத் துறையான ஹோட்டல், சில்லரை வணிகம், கேளிக்கை மையம், சுகாதார நிலையங்கள் போன்ற சேவைகளை அரசு கண்டு கொள்ளவில்லை என்ற குறை கூறப்படுகிறது.
மேற்கண்ட துறைகளைச் சார்ந்த சங்கங்களின் சம்மேளனங்கள் அது சம்பந்தமான கோரிக்கையை உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன், மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles