33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தம்மை முஸ்லிம் எனும் உத்தரவுக்கு
எதிராக மாது வழக்கு

🔊To listen to this news in Tamil, Please select the text.

தம்மை முஸ்லிம் அல்லாத நபராக அங்கீகரிக்கத் தவறிய முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, 37 வயது மாது ஒருவர் கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
1986இல் பிறந்த அவரை அவரின் தாயார் 1992இல் மதம் மாற்றியதாகவும் அவரின் தகப்பனார் 1993இல் விபத்தொன்றில் மரணமடைந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
தாம் மதம் மாற்றப்பட்டிருந்தாலும், இது வரை தாம் இந்து முறைப்படியே வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தம்மை முஸ்லிம் அல்லாதவர் என்று அறிவிக்க சிலாங்கூர் ஷரியா நீதிமன்றம் மறுத்த பின்னர், அதனை முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, அங்கும் தோல்வியடைந்ததால், கூட்டரசு நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவித்தார்.
தாம் ஓர் இந்து என்று அறிவிக்க வேண்டுமென்றும் சிலாங்கூர் ஷரியா நீதிமன்றம் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்புகளை ரத்து செய்ய வேண்டுமென்றும் அந்த மாது கோரிக்கை விடுத்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles